திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த அப்துல் சித்திக் மகன் ரோஷன் (19) என்பவர் பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் ரோஷன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு ரோசனை கைது செய்துள்ளனர். மேலும் ரோஷனின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர் மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments