திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்து பேருந்து நிலையம் நேற்று முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
141 நீண்ட தூர பேருந்துங்கள் 84 குறுகிய பயண பேருந்துகள் 120 மெகா ஃபுல்சில் பேருந்துக்கள் மற்றும் 56 நகர பேருந்துகள் அடங்கும். ஒவ்வொரு தளத்திலும் பேருந்து அட்டவணை மற்றும் இருக்கைகள், குடிநீர் வசதிகள்,கடைகள், தகவல்களை வழங்க எல்இடி காட்சி பலகைகள் மற்றும் ஸ்பீக்கர்கள் உள்ளன.
குடிநீர் வசதிகள், 5 atm,78 கடைகள், உணவகங்கள்,800க்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்கு காத்திருப்பு இடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் எளிதாக செல்லும் வகையில் டிக்கெட் கவுண்டர், பயணிகள் காத்திருக்கும் அறை, பேருந்து ஊழியர்களுக்கான ஓய்வறைகள், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறைகள், ஆறு லிஃப்ட்,ஆறு எக்ஸ்லேட்டர்கள், மற்றும் படிக்கட்டுகளும் உள்ளன.

இதுபோல் இன்னும் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையம் சில பணிகள் நிறைவுற்ற பிறகு இன்னும் 20 நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று நகராட்சி நிர்வாக அலுவலர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.அதுவரை வழக்கம்போல் (ஜங்ஷன்) மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வழக்கம் போல் செயல்படும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
389
10 May, 2025







Comments