Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் பிரதமரின் நேசகர வேட்பாளர் யார்?அண்ணாமலை பேட்டி

திருச்சி விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை…..

என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம் பங்கேற்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

கே.பி முனுசாமி பேசுவது சரியா? கே பி முனுசாமிக்கு அண்ணாமலை மீது வன்மம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவுக்கு உள்ளது போல பாஜகவுக்கு மோடி தான். மற்ற தலைவர்கள் பலர் உருவாகலாம், தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர்களின் பலர் உள்ளனர். ஆனால் மோடி போல் உருவாக்க முடியாது, 20 கோடி தொண்டர்களில் தாண்டி விட்டோம்.

தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான் இருக்க வேண்டும்,திமுக,அதிமுக இரண்டும் பங்காளிகள். நூற்றுக்கு 4 மார்க்கும் 5 மார்க்கும் எடுத்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நூற்றுக்கு நூறு எடுத்த மோடி எங்கே இருக்கிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. பாஜக மீது உள்ள எதிர்ப்பை விட அண்ணாமலை மீதான வன்மத்தை நான் ரசிக்கிறேன்.

என்டிஏ வை உருவாக்கியது பாஜக தான், அதிமுக இல்லை அது தண்ணியைப் போல் நீரோட்டமாக உள்ள கூட்டணி, என் டி ஏ கூட்டணியில் தற்போது கதவு,ஐன்னல் திறந்து உள்ளது. மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக இணையலாம்.

திமுக இளைஞர் மாநாட்டை பொருத்தவரை குடும்பத்திற்காக குடும்பத்தினர் நடத்திய மாநாடு. இயற்றிய தீர்மானத்தில் ஒன்றுக்கு கூட தகுதி இல்லை

திமுக தொண்டர்கள் நீட்டுக்கு எதிரான கையெழுத்திட்ட அஞ்சலட்டையை கூட சேலம் மாநாட்டில் தூக்கி எறிந்துவிட்டு சென்று விட்டார்கள், தமிழகத்தை திமுகவிடமிருந்தும், திமுக குடும்பத்தினரின், அராஜகம் மற்றும் அடாடிவயிடம் இருந்து மீட்பது தான் பாஜகவில் கொள்கை என்றார்.

சிறுமியை துன்புறுத்தியதாக திமுக எம்எல்ஏ குடும்பத்தினரை ஏன் இதுவரையிலும் கைது செய்யவில்லை, இது போன்று தான் கடலூர் எம்பி ரமேஷ் மீதும் நடவடிக்கை இல்லை சமூக நீதியை பற்றி பேச திமுகவுக்கு லாயக்கு இல்லை.

ஒற்றைக் கட்சி ஆட்சிக்கு இருக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள் .ஆனால் ஒற்றை குடும்பம் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் மக்கள் விருப்பம். இளைஞர் அணி மாநாடு என்பது நமத்துப்போன மிச்சர் அதை யாரும் சாப்பிடவில்லை. வந்த குப்பைக் கூடைகள் நிரம்பியது தான் திமுக இளைஞரணி மாநாட்டின் சாதனை.

தமிழகத்தில் திமுகவின் ஊழல் பற்றி தமிழக பத்திரிக்கையாளர்கள் ஏன் 31 மாதமாக பேசவில்லை ? எங்களது எதிரி திமுக தான், எங்கள் இரண்டு பேருக்கும் மட்டும் தான் போட்டி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மாநிலத்தில் ஆளும் திமுகவுக்கும் தான், தனி மனிதனாக அரசியல் கோட்பாட்டுக்கு உட்பட்ட நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

திமுக 2 ஜி பைல்ஸ் போய்க்கொண்டுள்ளது, இரண்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது 9ம் வெளியிட்ட பின்னர் திமுக பைல்ஸ் குறித்து பேசுவேன். பிஞ்சு போன உதிரிகள் எல்லாம் சேர்ந்து இந்தியா கூட்டணியாக வந்தார்கள் நாட்டில் முடிவு எடுக்க முடியாது. அது அபாயம் அதை தடுக்க தான் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க தொடங்கி உள்ளார்கள். 

திருச்சி மீது பாசம் என்பதால் தான் மோடி இரண்டு முறை வந்துள்ளார், குமாரமங்கலம் திருச்சியில் இருந்த போது நம்பிக்கை இருந்தது.

திருச்சியை மறுபடியும் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்பது உண்மையாக இருந்தது.

குமாரமங்கலம் திருச்சியில் இருந்த போது 

அவரிடம் சொன்னால் மத்திய அரசு உடனடியாக திருச்சிக்கு எதை வேண்டுமானாலும் செய்யும் என்ற நிலை இருந்தது . தற்போது அது இல்லை அதை உடைக்கணும். அதற்காக மோடிக்கு நேச கரம் நீட்டும் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது விஷனாக உள்ளது. அதை நோக்கி தான் பிரதமரின் பயணம் உள்ளது. தொடர்ந்து அதனால் தான் திருச்சிக்கு வருகை புரிந்து வருகிறார்.

 ஸ்ரீரங்கத்தில் நடந்த கம்பராமாயண நிகழ்வு என்பது உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என பிரதமர் கூறியுள்ளார்.ஆகவே திருச்சி பிரதமர் இதயத்தில் உள்ளது. ஆகவே பாஜக வேட்பாளர் திருச்சியில் போட்டியிட ஆசை என்றார்.

முதல்வர் ஸ்டாலின் மோசமாக திமுக சரித்திரத்தில் தோற்றுள்ளார். 2014 இல் ஜீரோ பல எம்பி எலெக்ஷனில் பூஜ்ஜியம் பெற்றுள்ளனர். வாக்கு சதவீதம் 20% ஆக இருந்தது முதல்வர் தற்போது பலவீனம் அடைந்து விட்டார், மனதளவில் பாஜக ஜெயிக்க ஆரம்பித்து விட்டது என எண்ண தொடங்கிவிட்டார்.நான் தாடி வளர்ப்பதற்கு சாமிக்கு ஒரு நேர்த்திக்கடன்  உள்ளது என்று தெரிவித்தார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *