Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கமல்ஹாசன் ஸ்டாலினை விமர்சிக்கும் அளவிற்கு மோடியை விமர்சிக்காதது ஏன்? – கரு பழனியப்பன் கேள்வி

திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் திமுக கூட்டணி தொழிற்சங்கள் சார்லி நலிந்து கிடக்கும் நமது நிறுவனத்தின் நிலையை மாற்றிட நமது ஒற்றுமையை அனைவருக்கும் பறைசாற்றி நாம் அனைவரும் ஒன்றுகூடி புதிய பாதை அமைத்து விடுவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது.

பெல் தொமுச தொழிற்சங்க பொதுச் செயலாளர் தீபன் தலைமை வகித்தார். ஏஐடியூசி தொழிற்சங்க நிர்வாகி  ராஜேந்திரன், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி அருணன், எல்எல் எப் லட்சுமணன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

 திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.

 மத்திய மாநில அரசுகளால் தொழிலாளர்கள் எவ்வாறு நசுக்கப்படுகிறார்கள் அதனால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்ல அவர்களை சார்ந்துள்ள குடும்பங்களும் பாதிக்கப்படுகிறது என்றும்.அதற்கு தற்போது நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமானது என்றும்.

முன்பெல்லாம் இருபெரும் கட்சிகளுக்கிடையே மட்டுமே போட்டி நடக்கும் என்றும் தற்போது மக்கள் நலம் போற்றும் கட்சிகளாக திமுக கூட்டணிக்கும் மக்கள் நலத்தை மதிக்காத அதிமுக கூட்டணிக்கும் இடையே இந்த தேர்தல் நடைபெறுவதாகும்.

 தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக கூடாது என மோடி, கமல் வரை பேசுகின்றனர் என்றும். கமலஹாசன் ஸ்டாலினைப் பற்றி தான் பேசுகிறார் என்றும் மோடியை பற்றி பேசுவதில்லை என்றும் தாராபுரத்தில் நடந்த பிரச்சாரத்தில் மோடி 1989ஆம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபையில் மரியாதை குறைவாக நடத்தப்பட்டார் என குறிப்பிடுகிறார் அப்படி நடத்தப்பட்டு இருந்தால் ஏன் அவர்கள் வழக்கு தொடுக்கவில்லை அதன் பிறகு எத்தனை முறை அவர் முதல்வராக இருந்தார் என கேள்வி எழுப்பினார்.

 மேலும் தமிழக முதல்வரை மோசமாக பேசி விட்டார்கள் என்று வழக்கு போடாமல் ஓட்டுப் போடுங்கள் எனக் கேட்கின்றனர் என்றும்.

 ஜனநாயக முற்போக்கு கூட்டணி உள்ளவர்கள் மக்கள் நலம் பேசுவார்கள் என்றும் தற்பொழுது மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு மருத்துவ படிப்புக்கு மட்டும் அல்ல என்றும் கலை கல்லூரியில் சேர்வதற்கு நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்றும் இது நம்மை படிக்க விடாமல் தடுப்பதற்கு செய்யும் வேலை என்றும் திமுக தலைவர் கலைஞர் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி இலவசம் என கூறினார். தற்போதைய தலைவர் ஸ்டாலின் முதல் தலைமுறை பட்டதாரி அரசு வேலையில் முன்னுரிமை என்று கூறியுள்ளார். 

 கலைஞர் 1996 ஆம் ஆண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் கொண்டு வந்தார் என்றும் மேலும் 2006ஆம் ஆண்டு கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம்தென்னரசு இடம் ஆரம்பக் பள்ளி 1 கி.மீ,  நடுநிலைப் பள்ளி 3 கி மீ ,  உயர்நிலைப்பள்ளி 5கிமீ,  மேல்நிலைப்பள்ளி 7 கி மீ தொலைவுக்குஒரு பள்ளி என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்று  பள்ளிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

 மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது கமல் இலவசத்தை கொடுத்து ஏமாற்றுகிறார்கள் இருக்கிறார்.

 ஆனால் இது பெண் இனத்திற்கான விடுதலை என்றும் பெண்களுக்கான முன்னேற்றம் என்றும் சுதந்திரமாக செயல்பட முடியும் என்றும் அதற்காகவே ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும் கூறினார்.

 மேலும் வறுமையில் இருந்திருந்தால் தான் அதன் கஷ்டம் கமலுக்கு தெரியும்.கருணாநிதி  இலவசம் தேவைப்படுவோர் உள்ளவரை தொடரும் என்று கூறுவார் என்றார்.

மேலும் சீமான் மாடு மேய்ப்பவர்கள் அரசு வேலையில் சேரலாம் என்று கூறுகிறார் என்றும். அதற்கு ஒரு திருக்குறளை எடுத்துக் காட்டுகிறார் என்றும் அந்த திருக்குறளுக்கு அதில் மாடு ஒரு சொத்து கிடையாது கல்வி தான் சொத்து என்று கூறினார்.

 மேலும் உழவனின் கையை உயர்த்தி கேட்டால் என்ன நடக்கும் என்பது டெல்லியில் நடைபெற்ற 150 நாள் போராட்டத்தின் மூலம் தெரிய வரும் என்றார்.

மேலும் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஒருவருடமாக மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் ரஜினியை தனிக் கட்சி தொடங்குவதற்கு பாஜக அழுத்தம் கொடுத்தார்கள் என்றும் ஆனால் அவர் முடியாது என்று சொல்லி நழுவி விட்டார் என்றும் அது மொட்ட கத்தி என்றும் வந்திருந்தால் முடிந்து இருக்கும் என்றும் கூறினார்.

 அதிமுக பிஜேபி ஏன் வேணாம் என்பதற்கு காரணம் தற்போது கோவையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து யோகி ஆதித்தனார் பிரச்சாரம் செய்ய வந்த போது காவி உடையில் கோவை அல்லோலப்பட்டது என்றும் அது திருச்சிக்கு வருவதற்கு நாள் ஆகாது என்றும் காவி கொரொனாவை விட கொடியது என்று கூறினார்.

மேலும் பாஜகவினர் மோடி படத்தை போடாமல் ஓட்டு கேட்கின்றனர். ஓட்டுக்காக பெரியார் படத்தை கூட போட்டுக் கொள்ள தயங்க மாட்டார்கள் என்றும்.
 காமராஜர், எம்ஜிஆர் புகைப்படத்தை  போட்டுக் கொள்கின்றனர் என்றும் கூறினார்.

பாஜக ஆட்சியில் பொதுத்துறை அரசு துறைகள் தனியார் மயமாக மாற்றி விடுகிறார்கள் என்றும் காரணம் தொழிலாளர்களின் போராட்டத்தை தடுப்பதற்காகவும்உரிமையை நசுக்கும் அதற்காகவும் என்றார்.

 மோடி ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட ஆரம்பிக்கவில்லை என்றும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 161 பொதுத்துறை நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், வாஜ்பாய் காலத்தில் 7 பொதுத்துறை நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டது மோடி காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் துறையாக மாற்றும் வேலை நடைபெறுகிறது என்றும். மேலும் 8 மணி நேரம் வேலை என்பது அம்பேத்கர் தொழிலாளர்களுக்கு பெற்றுத்தந்தது என்றும்,

 இந்த தனியார் மயமாக்குவதை அம்பானியிடம் ஒப் படைக்கலாமா, அதனிடம் ஒப்படைக்கலாம் என்பதில்தான் மோடிக்கு சிக்கல் உள்ளது என்றும்.

 அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது என்றும் அப்படி வெற்றி பெற்றால் அது பிஜேபி வென்று விட்டதாக  கருதுவேன் என்றும்.

 கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 38 தொகுதி திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்றும் ஒரு தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது என்றும் அது துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என்றும் அவர் மோடியின் படத்தை தனது லட்டர் பேடில்  பெரிதாக போட்டுள்ளார் என்றும்.

 நாடு உடைந்து போவது என்றால் அது பாஜகவினர் தான் என்றும் காரணம் அவர்கள் ஒரே நாடு என்று சொல்வதால் நம்மில் பல இருப்பதால் இது சாத்தியம் இல்லை என்றும் ஆனால் நம்மை பிரிவினைவாதி என்கின்றனர் என்றும் இந்துவாக ஒன்று கூடுங்கள் என்கிறார்கள் என்றும் 

நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்றும் மாட்டுக்கறி இங்கு தடை உள்ளது என்றும் ஆனால் அஸ்காமில் அது தேசிய உணவு என்றும் கூறியதோடு ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் நடக்கும் இந்த தேர்தல் என்றும்

அதிமுக கூட்டணியில் பெண் உரிமை மறுக்கப் படுவதாகவும், பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடைய பெண்கள் காசுக்கு ஆசைப்பட்டு போனவர்கள் பொய் வழக்கு தொடுக்கிறார்கள் என்று முதல்வராக கூறுகிறார் என்றும்.

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி கேட்டதற்கு அப்போது எனக்கு தெரியாது என்று கூறியதாகவும்,

 மருத்துவ கனவு நினைவாக அமல் இறந்துபோன அனிதாவின் உடலை பார்ப்பதற்கு கூட ஓபிஎஸ் வரவில்லை என்றும்.

நாம் மக்களோடு இரண்டறக் கலந்தவர்கள் என்றும் அதிமுக அப்படி இல்லை என்றும்.

கூட்டணி கட்சிகளிடம் ஒற்றுமை முக்கியம் என்றும் இன்னும் ஐந்து நாட்கள் தான் தேர்தலுக்கு  உள்ளது என்றும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமென்றும் கூறினார் .

மேலும் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஓபிஎஸ் நிரந்தரமில்லை என கூறுவதாகவும் ஆனால் அதற்கு ராமதாஸ் அது நிரந்தரமானது தான் என்று கூறி வருவதாகவும் கூறினார்.

 மேலும் அதிமுக அமைச்சரவையில் இருந்தவர்கள் வெளி தொகுதியில் சென்று பிரச்சாரம் செய்யாமல் தங்களது தொகுதியை தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும் எடப்பாடி மட்டும் எல்லா தொகுதிக்கும் சென்று வருகிறார் என்றும் ‘

எஸ்பி வேலுமணி தனது மகனுக்கு தனி விமானம் வாங்கி கொடுத்துள்ளார் என்றும்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதிக்கே   போகவில்லை என்றும் டெல்லி மாநாடுகளுக்கு போனவர்கள் தான் கொரொனா பரவியது என்று சொன்னவர் இப்போது சொல்வார்களா என்றும் கேட்டார்.மேலும் மாணவி அனிதா இறந்தபோது விஜயபாஸ்கரிடம் கேட்டபோது தேர்வு தோல்விக்கு சாவு தீர்வாகாது என்று கூறினார்.

234 தொகுதிகளிலும் சீமான் கமல் போன்றவர்களை வேறு கட்சி  பெயர்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்றும் இது தசவதாரம் போல் உள்ளது என்றும் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் கோரி இதோடு திருவெறும்பூர் இதுக்கு போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் எனக் கூறியதோடு பின்னர் பெல் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக பேசியதாவது 

பெல் நிறுவனத்திற்கு நிலுவையில் உள்ள 4000 கோடி ரூபாயை உடனடியாக திமுக ஆட்சி அமைந்ததும் பெற்று தரப்படும். மே மாதம் முதல் வாரத்தில் திமுக ஆட்சி அமையும் என்றும். மின்சார துறைக்கு தேவையான 80 சதவீத ஆர்டர்களை திமுக ஆட்சி காலத்தில் பெல்  நிறுவனத்திடம் வழங்கியதாகவும். பெல் நிறுவனத்தில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வரை வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே வேலை பார்த்து வருவதாகவும், இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளதாகவும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அதற்குரிய நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் கூறியதோடு பெல் நிறுவனத்தில் உள்ள வங்கியில் காணாமல்போன ஒன்னே முக்கால் கோடி பற்றி சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்

மேலும் ஒவ்வொருவரும் நாட்டு நடப்பை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கூறினார்.

 இந்த விழாவில் முன்னாள் எம்எல்ஏ சேகரன் | வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் நன்றி கூறினார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *