திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரபு (30), த.பெ. குமார், அரிஜன தெரு, மாகாளிக்குடி, என்பவர் கடந்த (04.11.2023)-ஆம் தேதியிலிருந்து காணமால் போனதாக கொடுத்த புகாரையடுத்து, திருச்சிராப்பள்ளி காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண் குமார், உத்திரவின் பேரில் சமயபுரம் காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பிரபுவின் மனைவி வினோதினி (27), என்பவருக்கும், சமயபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த அம்மாசி மகன் பாரதி என்பவருக்கும் இடையேயான தகாத உறவை, பிரபு கண்டித்ததால், கடந்த (04.11.2023)-ஆம் தேதி இரவு வினோதினி போதையில் இருந்த கணவர் பிரபுவை கீழே தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது. மேற்படி இறந்த நபரின் உடலை யாருக்கும் தெரியாமல், வினோதினி, பாரதி மற்றும் அவரது நண்பர்களான சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ரூபன் பாபு (26),
திவாகர் (18), சர்வான் (18) ஆகியோர் உதவியுடன் திருச்சி மன்னார்புரம் அருகே எரித்து, மீதம் இருந்த உடல் பாகங்களை காவிரி ஆற்றில் வீசியுள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது. இது தொடர்பாக சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments