கணிதம், நிகழ்தகவு கோட்பாடு, புள்ளியியல் நிதி, பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் உட்பட பல ஒன்றுக்கொன்று தொடர்புடைய பாடங்களை ஆக்சூரியல் அறிவியல் உள்ளடக்கியிருக்கிறது. இன்றைய சூழலில் காப்பீட்டு துறையானது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. காப்பீடு என்றவுடன் பலரும் நினைப்பது போல இன்சூரன்ஸ் மற்றும் டெவலப்மென்ட் ஆபீஸர் என்பதல்ல மாறாக ஒவ்வொரு துறையிலும் நிறுவனங்களிலும் காப்பீட்டு திட்டங்களை வடிவமைத்து காப்பீட்டு தொகையை நிர்ணயித்து.
மேலும் காப்பீடு இழப்பீடு தொகையை முடிவு செய்தல் என பல பிரிவுகளை உள்ளடக்கியது. இது சார்ந்த நிபுணர்களை உருவாக்கும் பாடமே ஆக்சூரியல் அறிவியல். பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், புள்ளியியல், மற்றும் கணிதம் படித்தவர்கள் இந்த பாடத்திட்டத்தை தேர்வு செய்யலாம். உலக அளவில் காப்பீட்டு துறைகள் அதிகமாக பெருகி வரும் நிலையில், அது சார்ந்த நிபுணர்களும் அதிகாரிகளும் அலுவலர்களும் அதிகமாக தேவைப்படுகின்றனர். முதுகலை அறிவியல் படித்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலைகள் காத்துக் கிடக்கின்றன.
இத்துறையில் ஆய்வு படிப்பை முடித்தால் உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேலை பெறும் வாய்ப்பு மிக வேகமாக உயர் பதவிகளை அடைவது மிக நிச்சயம். இளங்கலை கணிதம், புள்ளியியல் மற்றும் வணிக கணிதம் பயின்றவர்கள் முதுகலை ஆக்சூரியல் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இந்தியாவில் மிக சில கல்லூரிகள் மட்டுமே இப்பாடப்பிரிவு நடத்தப்படுகிறது. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மிக முக்கியமானதாகும். கடந்த சில வருடங்களாக பல ஆச்சூரியர்களை உருவாக்கி உலகின் பல பகுதிகளில் பணிக்கு அனுப்பி இருக்கிறது.
தொழில் வழங்குனர்கள் நேரடியாக வழங்கும் காப்புறுதி, சமூக காப்புறுதி உட்பட மருத்துவ காப்பீடு செயலியல் அறிவியல் இயலாமை நோயுற்ற நிலை, இழப்புகள் மற்றும் கருவுறுதல் தற்செயல் நிகழ்வுகளின் பகுப்பாய்வு செய்வதன் மீது கவனம் செலுத்துகிறது. நுகர்வோர் தேர்வு மற்றும் மருத்துவ சேவைகள் நடைமுறை பகுதியில் வினியோக விளைவுகள் மற்றும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் பயன்படுத்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த காரணிகளை ஹார்வர்டில் வள அடிப்படை ஒப்பீட்டளவில் பல ஒழுக்கமானஆய்வியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளன. நன்னை கட்டமைப்பு வடிவமைப்பு பணத்தை திரும்பப் பெறும் தரநிலைகள் மற்றும் சுகாதார செலவில் முன்மொழியப்பட்ட அரசாங்க தரநிலைகள் விளைவுகள் ஆகியவற்றில் ஆக்சுவேரியல் அறிவியல் உதவுகிறது.
இக்கல்லூரியின் பாடத்திட்டம் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
IFOA எனப்படும் இங்கிலாந்தில் உள்ள பட்டய தொழில்முறை துறை பின்பற்றும் பாடத்திட்டத்தை இக்கல்லூரி பின்பற்றுகிறது. தொடர்ந்து 25 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான முறையில் தரமான கல்வியை அளித்துக் கொண்டு வருகிறது. இந்த கல்லூரி இந்தியாவிலேயே இந்த துறையில் இளங்கலை பட்டம் உள்ள ஒரு சில கல்லூரிகளில் முதன்மையானதாகும்.
மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் பாடங்களை கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டுள்ளது. இதன் சிறப்பு ஆண்டுதோறும் பன்னாட்டு அறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு துறை சார்ந்த ACTSUM என்னும் சிறப்பு கலந்துரையாடல் பயிற்சி நடத்தப்படுகிறது. கடந்த சில வருடங்களாக இந்த துறையில் ஆராய்ச்சி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளில் இங்கு பயின்ற மாணவர்கள் தங்களது இறுதி ஆண்டில் வளாக நேர்காணலில் உலகளாவிய பெரிய நிறுவனங்களான SWISSRE, WNS, PWC, VDART, RRD ஆகியவற்றில் உயர்ந்த ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments