திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது. வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது போல திருச்சி மக்களின் மனம் குளிர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரு மணி நேர பெய்த மழையால் மாநகரின் பிரதான சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் மாநகரின் பிரதான சாலையாக உள்ள திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள ஐயப்பன் கோயில் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தோடு வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் மழை நீர் செல்லக்கூடிய பகுதியில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்து வெறும் கால்களால் சென்று அந்த அடைப்பை நீக்கினர்.
இதனால் சாலையில் தேங்கி இருந்த மழை நீர் வேகமாக வடிய தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். மற்றவர்களை எதிர்பாராமல் தாமாக முன்வந்து வாகன ஓட்டிகளின் நலன் கருதி துரிதமாக செயல்பட்ட போக்குவரத்து காவலர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டி சென்றனர். திருச்சி போலீஸ் என்றால் இப்படித்தான்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments