திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா தளம். இது இயற்கை எழில் கொஞ்சம் புளியஞ்சோலை அய்யாற்றில் நீராடினால் குறிப்பிட்ட நோய்கள் தீரும் என்ற நம்பிக்கையில் இங்கு ஏராளமானோர் நீராடி செல்வது வழக்கம்.
மேலும் கொல்லிமலை ஆகய கங்கையில் உற்பத்தியாகும் நீரானது பல மூலிகை மீது பட்டு புளியஞ்சோலையில் சமதள பரப்பில் ஓடுவதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நீராடி செல்வது வழக்கம். தற்போது கொல்லிமலையில் கன மழை காரணமாக அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி ஆற்றில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். காற்றாற்று வெள்ளம் சீற்றம் குறைந்த உடனே குளிப்பதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments