திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஏடிஎம் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணைய சத்ய பிரியா தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகரில் உள்ள அனைத்து வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்துகொண்டு மாநகர காவல் ஆணையரின் அறிவுரைகளையும் தங்களது ஆலோசனைகளையும் கலந்துரையாடினர்.
திருச்சி மாநகரில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவம் மற்றும் எந்த அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினர் வங்கி ஊழியர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப ரீதியான கண்காணிப்பு தகவல்களை தெரிவித்தனர்.
பின்னர் இக்கூட்டத்தில் பேசிய மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா திருச்சி மாநகரில் மொத்தம் 320 ஏடிஎம் மையங்கள் உள்ளது. இதில் 320ல் பாதுகாப்பிற்கு 35 காவலர்கள் மட்டுமே வங்கி மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகரில் உள்ள 190 வங்கிகளில் 320 ஏ.டி.எம் மையங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்களை ஒரு மாதத்திற்குள் நிறுவப்பட வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments