சிங்கப்பூரிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசியா நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர், அவரது பேக்கில், ஒருகிலோ முழுமையடையாத நகைகளை மறைத்து கொண்டு வந்தது தெரிந்தது.
இதனால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நகைகளை பெற்றுக்கொள்ளலாம் அல்லது வணிக நோக்கில் நகைகள் முறைகேடாக கொண்டு வந்திருந்தால் நகையை கொடுத்தனுப்பிய நபர்களை அடையளம் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பின்னர் தொடர் விசாரணையில், பயணி திட்டமிட்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.60.95 லட்சம் மதிப்புள்ள அந்த நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அப்பெண்ணையும் கைது செய்து செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments