108 வைணவ தலங்களில் முதன்மையானதாக விளங்கும் கூடிய ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டு வருடம் கோவிட் தொற்று பரவல் காலத்தில் கோயிலுக்கு பக்தர்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை. வெளியூர் சுற்றுலா பயணிகளும் வரமுடியாத நிலையில் தடை இருந்தது.
இந்நிலையில் தற்போது பங்குனி மாதங்களில் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஸ்ரீரங்கத்திற்கு வரத் துவங்கி விட்டனர். ஆனால் அவர்களுக்கு உரிய வாகன நிறுத்த இடங்கள் இல்லை. மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டும் நீண்ட நாட்களாக உள்ளது.
ஸ்ரீரங்கத்திற்க்கு வந்த ஆந்திர மாநிலம் சுற்றுலா பயணி அம்மா மண்டபம் ரோட்டில் புஷ்பக் நகர் இன்று மார்ச் 21.03.2022 காலை 07:30 மணியளவில் தண்டும்மாள் (வயது 60 ) சாலையை கடக்கும் போது ஸ்ரீரங்கம்-ஜங்சன் செல்லும் அரசு பேருந்து மோதியதால் பின் தலையில் பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீரங்கத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த போதிய வசதியில்லாததால் அம்மா மண்டபம் ரோட்டியிலேயே வெளியூர் பஸ்கள் நிறுத்துவதால் சுற்றுலா பயணி வாகனம் வருவது தெரியாமல் சாலையை கடந்து உயிர் இழந்துள்ளதாக நகரவாசிகள் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments