ஸ்ரீரங்கம் மீன் மார்க்கெட் அருகே சாலையில் வசித்து வந்த முருகன் என்பவரின் மகன் ராகவன் நேற்று கடத்தப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டனர். இந்நிலையில் 24 மணி நேரத்தில் சமயபுரம் பகுதியில் அக்குழந்தை தனியாக நின்றுள்ளது. ராகவனை மீட்டு தற்பொழுது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். கடத்தி சென்ற பெண்ணின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கடத்திச் சென்ற பெண் தன்னை போலீஸ் நெருங்கி விட்டதால் சமயபுரத்தில் இக்குழந்தையை விட்டு விட்டு சென்றாரா இல்லை? வேறு ஏதும் தகவல் கிடைத்து காவல்துறையிடம் சிக்கி விடுவோம் என தப்பித்து சென்றாரா? எதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து இந்த குழந்தையை கடத்தி சமயபுரத்தில் கொண்டு விட்டு சென்றார். இது போல் இவர் மற்ற குழந்தைகளை கடத்தி விற்று உள்ளாரா என்று பல்வேறு கேள்விகளுக்கு காவல்துறையினர் விடைதேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO
Comments