திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் நீ நீண்ட நாட்களாக தண்ணீர் பஞ்சம் இருந்து வந்துள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை பொது மக்கள் கூறியுள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சாலை மறியல் செய்தனர். அப்போது சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதாக உறுதி அளித்தனர்.
ஆனால் தண்ணீர் பஞ்சம் தீர்ந்த பாடில்லை. இதனால் மீண்டும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலி குடங்களுடன் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் செய்தோம் அரசு அதிகாரிகள் வந்து கண்டு எதுவும் கண்டு கொள்ளவில்லை ஆகையால் அரசு அதிகாரிகள் வந்தால் தான் நாங்கள் போராட்டத்தை கை விடுவோம் என்று ஊர் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments