கொரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தொகையை திரும்ப செலுத்த நிர்பந்தம் செய்யக்கூடாது மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் இலால்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய கடன் தவணை தொகையை திரும்ப செலுத்தக் கேட்டு வரம்புக்கு மீறி பேசி நிர்பந்தம் செய்து வருவதாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு
தொடர்ந்து புகார்கள் வருகிறது.
எனவே தவணைத் தொகை செலுத்த கட்டாயப்படுத்தாமல் கால அவகாசம் அளிக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தொகையை திரும்ப செலுத்தும் கால அட்டவணையை மாற்றி அமைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவன பணியாளர்கள் வெளியூர் நபர்களாக இருப்பதாலும், கடன் தொகை வசூல் செய்வதற்காக அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதாலும் இவர்கள் மூலம் பொது மக்களுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகமுள்ளது.
எனவே இது தொடர்பாக எந்த புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும். இதையும் மீறி புகார்கள் ஏதேனும் எழும் பட்சத்தில் இச்செயல் தொடர்புடைய தற்போது அரசு விதித்துள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறிய செயலாக கருதப்பட்டு அனைத்து தனியார் வங்கிகள், நுண் நிதி கடன் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments