ராஜஸ்தான் மாநில பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி அறுக்கப்படும் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அருணாச்சல மன்றம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவி சீலா செலஸ் தலைமை தாங்கினார்.
இதில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலை பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, காங்கிரஸ் மாநில செயலாளர் வக்கீல் மோகனாம்பாள், மீனவர் அணி மாவட்ட தலைவர் வக்கீல் தனபால்,
மாவட்ட செயலாளர் எழிலரசன், மகளிர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவி மாரிஸ்வரி , ஃபெமினா விஜயகுமார் பரமேஸ்வரி சரோஜாதேவி ஸ்டெல்லா ஜெகதாம்பாள் பரமேஸ்வரி மீனம்பாள் அன்னை தெரசா மீனவரணி செல்வகுமார்,அன்பில் ராஜேந்திரன், நடராஜன்,ஊடகப்பிரிவு செந்தில் குமார்மற்றும் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதில் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் மோடி அரசு மோசடி அரசு என கோசம் எழுப்பப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments