Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி VDart நிறுவனத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

திருச்சி VDart நிறுவனத்தில் GWLI சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது

GWLI (உலகளாவிய பெண்கள் தலைமைத்துவ முன்முயற்சி) நவம்பர் 2019 இல் VDart நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சித்அகமது ஆல் தொடங்கப்பட்டது.VDart க்குள் பெண் தலைவர்களை உருவாக்குவதே குறிக்கோள்.

 அனைத்து பெண்களையும் ஒன்றிணைத்து அவர்களுடன் தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சிக்காக மாதாந்திர வெபினார்கள் நடத்தப்பட்டது. அப்போதிருந்து, பெண்களுக்கான SOAR வழிகாட்டுதல் மற்றும் ஸ்பான்சர் செய்தல், ஒருவரையொருவர் ஆதரிப்பதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் சக ஆதரவு குழு, அவர்களின் தேவைகளை கேட்க முறையான பின்னூட்ட வழிமுறைகள், ஆங்கில மொழி மேம்பாட்டு திட்டம் உட்பட பல திறன் மேம்பாட்டு திட்டங்கள் போன்ற பல திட்டங்களை தொடங்கினோம்.

மகளிர் தினத்தையொட்டி,  

VP people strategy and transformation IIM திருச்சிராப்பள்ளியில் நிர்வாகக் கல்வித் திட்டத்தை அறிவித்தது.  இந்த திட்டம் VDart இன் வளர்ந்து வரும் பெண் தலைவர்களுக்கானது. ஸ்டான்போர்ட் மற்றும் ஹவர்ட் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்துடன் தரப்படுத்திய பிறகு VDart க்காக 8 மாதங்கள் செலவிடப்பட்டு தயாரிக்கப்பட்டது.

 பெண்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம் இந்த திட்டத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை மாற்றி உள்ளோம்.எதிர்காலத்தில் பெண்களுக்கான ரிட்டன்ஷிப் திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் நேற்றைய தினம் சிறப்பு விருந்தினராக ஹலோ எஃப்க்ஷஎம் சகா கலந்து கொண்டு பெண் விடுதலை மற்றும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு சமூகத்தில் பெண்கள் சிறந்து விளங்குதல் குறித்து உரையாற்றினார்.தொடர்ந்து ஊழியர்களோடு கலந்துரையாடல் நடைபெற்றது.மகளிர் தின விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு நிறுவனத்தின் துணை தலைவர் ஆலிவர் சாம் இனிப்புகளை வழங்கினார்.

மகளிர் தின விழாவில் ‌ துணைத் தலைவர் ஆலிவர் சாம், சீனியர் மேனேஜர் சங்கரநாராயணன்,GWLI தலைவர் தாரணி மற்றும் VDart நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *