திருச்சி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் சு.தனலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி மாவட்ட மைய நூலகத்துக்கு வருகை தரும் அனைத்து மகளிரும் கட்டணமின்றி உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவர். இதைத் தொடர்ந்து மகளிருக்கு ‘என் வாழ்வில் நூலகம்’ என்ற தலைப்பில் காலை 10.30 மணி முதல் 11 30 மணி வரை கட்டுரைப் போட்டி நடைபெறும்.
இதில் சிறந்த 3 கட்டுரைகளுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கப்படும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் தங்கள் பெயரை நேரிலோ அல்லது மைய நூலக தொலைபேசி எண்ணிலோ (0431 2702242) தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
அதன்பின், மகளிருக்கிடையே ‘நூலகமும் மகளிரும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். மேலும், மகளிருக்கான நூல்கள் சிறப்பு கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மகளிர் பங்கேற்று பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்..
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO
Comments