தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 06.04.2021 அன்று நடைபெற உள்ளதையொட்டி திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் அனைத்து கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் வாயிலாக துண்டு பிரசுரங்கள், கிராமப்புறங்களில் பெண்கள் மத்தியில் கோலப்போட்டி போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் சார்பில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கோலம் மற்றும் ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments