திருச்சி தென்னூர் அக்ரகாரம் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் தனியார் கட்டிடம் உள்ளது இந்த கட்டிடத்தில் சாப்ட்வேர் நிறுவனம் மற்றும் புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலையம் உள்ளது இந்நிலையில் இந்த கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அந்த கட்டிடத்தின் பக்கவாட்டில் கண்ணாடி பொருத்தும் பணி நடைபெற்று வந்தது இந்த பணியில் சரவணகுமார் செல்வகுமார் (20) ஈடுபட்டிருந்தனர். கட்டடத்தின் பக்கவாட்டு சுவற்றில் கண்ணாடி பொருத்துவதற்காக கிரேன் உதவியுடன் கண்ணாடி பதிக்கப்பட்டு வந்திருந்த போது திடீரென கம்பி அறுந்து விழுந்ததில் இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் செல்வகுமார் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் உடனிருந்த சரவணகுமார் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments