திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கோவிட் பணியிட தடுப்பூசி இயக்கத்தை கழக வளாகத்தில் 18 முதல் 40 வயதுள்ள தகுதியுள்ள மற்றும் விருப்பம் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி இயக்கத்தை இயக்குனர் மருத்துவர் மினிஷாஜி தாமஸ், துணை இயக்குனர் மருத்துவர் உமாபதி முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது இன்றைய காலகட்டத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்ள மிக அவசியமானது தடுப்பூசி போட்டுக்கொள்ளுதலே என்றும், அனைத்து ஊழியர்களும் நம்பிக்கையுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள இயக்குனர் டாக்டர்.மினி ஷாஜி ஊக்கப்படுத்தி உள்ளார்.
மருத்துவ அதிகாரி டாக்டர் பிரியங்கா மற்றும் கழக மருத்துவமனையின் மருத்துவ குழு திருச்சி அரசு குழுவுடன் இணைந்து தடுப்பூசி முகாமை நடத்தி உள்ளனர். இந்த தடுப்புச் இயக்கத்தின் போது ஒரே நாளில் 240 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பயனாளிகள் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசிக்கு பிறகு 30 நிமிடத்திற்கு கண்காணிக்கப்பட்டனர்.
இதனையடுத்து தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு தற்காலிக தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments