உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கும் விதமாக துறையூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகத்தில் PDI நிறுவனத்தின் மூலம் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் PDI திட்ட மேலாளர் முத்துக்குமார் எச்ஐவி /எய்ட்ஸ் குறித்த தகவல்கள் பரவும் வழி பரவாத வழிகள், பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும், மேலும் பொதுமக்கள் எச்ஐவி எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை கரைப்படுத்துதலை தவிர்த்தல் போன்ற தகவல் பற்றியும் எடுத்து கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், திருநங்கைகள், நலிவடைந்த பெண்கள், ஒத்த பாலினத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது சுமார் 80 கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு PDI நிறுவனத்தின் இயக்குனர்.முனைவர் இல . அம்பலவாணன் தலைமை வகித்தார். கொண்டார்கள், கலந்து கொண்ட அனைவரும் எச்ஐவி இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments