திருச்சி வனத்துறையினர் உலக பல்லுயிர் பெருத்த தினத்தை (International day of Biological Diversity) முன்னிட்டு ஹோலி கிராஸ் கல்லூரியில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்த ஓவிய போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 பள்ளிகளை சேர்ந்த மாணவ / மாணவியர் கலந்து கொண்டனர்.
“Be part of the plan” என்ற கருப்பொருளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 முதல்12 ஆம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/ மாணவியர்களுக்கு திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். முன்னதாக பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் தற்போதய சுற்றுச்சூழல் பாதிப்பு, காலநிலை மாற்றம், வன உயிரினங்களை பாதுகாத்தல் குறித்து பள்ளி மாணவ / மாணவியரிடையே விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார், கல்லூரி துணை முதல்வர் ஜூடி, மாவட்ட கல்வி அலுவலரின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், திருச்சி வனச்சராக அலுவலர் கோபிநாத் ஆகியோர் பங்கேற்றார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments