Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் உலக தரத்துடன் துப்பாக்கி சுடும் தளம் – ஆயுட்கால உறுப்பினர்கள் கூட்டம்!

திருச்சி ரைபிள் கிளப் (Trichy Rifle Club) கடந்த 12.02.2020 அன்று உருவாக்கப்பட்டு ,24.02.2020 அன்று தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975 விதி 10-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, திருச்சி கே.கே. நகர், மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் உலக தரத்துடன் துப்பாக்கி சுடும் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதுவரை சுமார் 161 ஆயுட்கால உறுப்பினர்கள் இந்த கிளப்பில் இணைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் J.லோகநாதன் தலைமையில் ஆயுட்கால உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. 

Advertisement

இதில் திருச்சி ரைபிள் கிளப்பின் முக்கிய நிர்வாகிகள்,கட்டிட ஒப்பந்ததாரர்,கட்டிட நிபுணர், நிர்வாக உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களுக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் (ஜமால் முகமது கல்லூரி எதிரில்) அமைந்துள்ள ரைபிள் கிளப் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *