தண்ணீர் அமைப்பு சார்பில் இ.புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தின விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் மரக்கன்றுகள் நடப்பட்டது.மாணவர்கள் செல்வி. சக்திஶ்ரீ, பூஜாஸ்ரீ, விழிப்புணர்வு பாடல் மற்றும் உரையாற்றினர். தொடர்ந்து சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கி. சதீஷ் குமார் உறுதிமொழி உரை வழங்கினார். இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் முன்னிலையில் 57 ஆவது மாமன்ற உறுப்பினர் திரு. முத்து செல்வம் பங்கேற்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
சாரணர் இயக்க மாணவர்கள் பங்கேற்றனர். நாவல், கொய்யா, நெல்லி மரக் கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. புஷ்பலதா தலைமை ஏற்றார். தண்ணீர் அமைப்பின் இணைச் செயலர் ஆர்.கே. ராஜா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் பிளாஷ்டிக் . பயன்பாட்டின் தீமைகள் குறித்தும், மரக்கன்றுகள் நடுதல், பசுமைப் பரப்பை அதிகரித்தல், மரங்களைப் பாதுகாத்தல், நீர்நிலைகள் பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு, துணிப்பை பயன்பாடுகள் குறித்து மாணவர்களிடை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments