Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

உலக சுற்றுச்சூழல் தினம் -டேக்வாண்டோ சோல்ஜர்ஸ் அகாடமியில் மரக்கன்று நடும் விழா

திருச்சி விமான நிலையம் வயர்லஸ் சாலை பகுதியில் உள்ள மைதனாத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் இயற்கை வளத்தையும் நமது பூமியையும் மாசு படுத்தாமல் பாதுகாக்கப்பது நம் அனைவரின் கடமை

என்பதை வலியுறுத்தியும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் மரங்களை நட்டு வளர்க்க ஊக்கபடுத்தும் விதத்தில் டேக்வாண்டோ சோல்ஜர்ஸ் அகாடமியில் பயிற்சி பெரும் மாணவ மாணவிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொய்யா மாதுளை நெல்லி உள்ளிட்ட பழ

 வகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள் தவிர்க்கும் வகையில் மக்கும் வகையிலான பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பழ வகையிலான மரககன்றுகள்

 நடும் நிகழ்வும் நடைபெற்றது இந்நிகழ்வில் டேக்வாண்டோ சோல்ஜர்ஸ் அகடமியில் விளையாட்டு பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பழ வகையிலான கொய்யா நெல்லி எலிம்பிச்சை சீதா பழம் உள்ளிட்ட மர கன்றுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர்.கோவிந்தராஜ் முன்னாள் ராணுவ வீரரும் டேக்வாண்டோ சோல்ஜர்ஸ் அகடமியின் பயிற்ச்சியாளரும்மான

 டி. பாலசுப்பிரமணியன் பெட்காட் திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திக் டேனியல் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் மகளிர் பிரிவு செயலர் வழக்கறிஞர் கார்த்திகா விளையாட்டு பிரிவு செயலர் சுரேஷ் பாபு வழக்கறிஞர் ஆறுமுகம் மைக்கேல் ஷேக் ராஜேஷ் தாய் நேசம் அறக்கட்டளை தலைவர் ஹெப்சி சத்யாராக்கினி மார்கரெட் தின சேவை அறக்கட்டளை மற்றும் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் சிவ பிரகாசம் அறங்காவலர் பகவதி

 தன்னார்வலர்கள் புவனேஸ்வரி ராகுல் யோகம்பாள் ரஷிகா சர்வேஸ்வரா ராஷிகா சாய் நிதிஷ் சாய்ரிதிஷ் மற்றும் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்வின் முடிவில் மாற்றம் அமைப்பு மற்றும் மாணவர்கள் சார்பில் வீடுகளில் மரகன்றுகள் நடப்பட்டது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *