Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உலக சுற்றுச்சூழல் தினம் – தேசிய கல்லூரியில் திருச்சி எஸ்பிகள் மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்

`அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது பூமி மட்டும்தான்” என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் வென்டெல் பெர்ரி ( Wendell Berry). உண்மைதான். பொதுவானதின் மீதுதான் பொதுவாக யாருக்கும் அக்கறை வருவதில்லை. சுற்றுச்சூழல் கூட அப்படித்தான்.

Advertisement

மனிதரிடமிருந்து இயற்கையைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தினம் இது. உலகம் முழுவதும் சுமார் 183 நாட்களில் இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

Advertisement

இயற்கையை பாதுகாக்கும் பொருட்டும் வருங்கால தலைமுறைகளை இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையை வழிவகுக்க திருச்சி தேசிய கல்லூரி சார்பாக இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வினை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் திருச்சி மாவட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் மரம் நட்டு இந்த இனிய நாளை தேசிய கல்லூரியில் அடுத்த தலைமுறைக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல வழி வகுத்துள்ளனர்.

இயற்கையை பாதுகாக்கும் வண்ணம் தேசிய கல்லூரி வளாகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இன்று நடப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் தேசிய கல்லூரி கல்லூரி முதல்வர் சுந்தரராமன், கல்லூரி துணை முதல்வரும், உடற்கல்வி துறை தலைவருமான பிரசன்ன பாலாஜி‌ மற்றும் பேராசிரியர் குணசீலன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு இந்த சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *