குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் மார்ச் 7 முதல் 12ஆம் தேதிவரை கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டம் தில்லை நகரில் செயல்பட்டு வரும் வினோத் கண் மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் மார்ச் 7 முதல் 12 வரை குளுக்கோமா எனப்படும் கண் அழுத்தப் பரிசோதனைமற்றும் கண் தொடர்பான பரிசோதனைக்கான பதிவு கட்டணம் இலவசம் மேலும் ரூபாய் 2000 மதிப்பிலான கண் அழுத்தப் பரிசோதனைகளும்
முற்றிலும் இலவசமாக வழங்க உள்ளனர்.பரிசோதனையில் குளுக்கோமா நோய் கண்டறியப்பட்டால் ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து பொருட்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
கிளாக்கோமா… ஒரு விளக்கம் : கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே கிளாக்கோமா. பொதுவாக, ஆக்குவஸ் ஹூயுமர்( Aqueous humour) என்ற தெளிவான திரவமானது கண்ணின் முன்பகுதிக்குள் சுற்றி வரும். இந்தத் திரவம் அளவில் அதிகமாக உற்பத்தியானாலோ அல்லது முறையாக இது வெளியேறாமல் இருந்தாலோ கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் பார்வை நரம்புகள் பாதிப்படையும். கிளாக்கோமா பிரச்னை ஏற்படும்.
அறிகுறிகள் : கண் பார்வையில் தொடர்ந்து மாற்றம் ஏற்படுவதால் அடிக்கடி கண்ணாடி மாற்றுதல். காட்சிக் களத்தில் (visual field) ஏற்படும் குறைபாடுகளால் நடக்கும்போது பக்கவாட்டில் இடித்துக்கொள்ளுதல், வாகனம் ஓட்டும்போது பக்கவாட்டுப் பார்வை தெரியாமல் இருத்தல். இத்தகைய அறிகுறிகளைத் தொடர்ந்து, குழலின் வழியாகப் பார்ப்பதுபோல் (Tubular Vision) பார்வை இருக்கும். இந்தப் பாதிப்புக்குப் பிறகும் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் கண் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம்.
கிளாக்கோமாவில் ஆரம்பநிலையில் அறிகுறிகள் சிலருக்குத் தென்படாமலோ அவற்றை கவனிக்காமலோ போகலாம். எனவே, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒரு முறையும் 50 வயதைத் தாண்டியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் கண்ணில் கோளாறு இருப்பவர்கள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO
Comments