Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

2ம் உலகப்போர் நினைவு தினம் – பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்று துறை காணொளி கருத்தரங்கம்

ஆகஸ்ட் 6ஆம் தேதி உலக மக்களால் மறக்க முடியாத ஒரு தினம். ஹிரோஷிமா தினம் நினைவு கூரும் நாளாகவும், பல நாடுகளில் போர் எதிர்ப்பு மற்றும் அணுசக்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கான மையமாகவும் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதை ஆவணப்படுத்தும் இந்த நாளில் ஹிரோஷிமா தினத்தை பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத் துறை நினைவு கூர்ந்தது, ” No more Little boy… Please” என்ற தலைப்பில் ஹிரோஷிமா தினம் நினைவு கூறப்பட்டது. 

நாகர்கோவிலில் உள்ள கிறிஸ்தவ பெண்கள் கல்லூரியின் வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பேராசிரியை டாக்டர் பீனா காணொளி மூலமாக மாணவர்களிடையே இந்த தினத்தின் முக்கியத்துவத்தையும் லிட்டில் பாய் என்ற  அணுகுண்டின் தன்மைகளையும் எந்த நோக்கத்திற்காக எதை நிறுத்துவதற்காக, அமெரிக்கா இந்த குண்டு தாக்குதலை ஹிரோஷிமா மீது நிகழ்த்தியது என்ற காரணத்தையும், போர் நிறுத்தம் ஏற்பட்டு பல ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அதனின் விளைவுகள் எவ்வாறு உள்ளது என்பதையும் விவரமாக எடுத்துரைத்தார்

இந்த காணொளி நிகழ்ச்சி பிஷப் ஹீபர் வரலாற்று துறையால்  நடத்தப்பட்டது. பேராசிரியை டாக்டர்.எலிசபெத்- ன் இறைவழிபாட்டுடன் தொடங்கிய நிகழ்வு வரலாற்றுத்  துறைத்தலைவர் டாக்டர். பெமிலா அலெக்சாண்டர் வரவேற்புரை ஆற்ற, பேராசிரியர் மனுநீதி நன்றியுரையுடன் நிறைவடைந்தது. இந்த காணொளி நிகழ்ச்சியில் பேராசிரியர். அருளானந்து செல்வி. நிறைமதி, ஜஸ்டின் மற்றும் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *