திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், இந்தியா சுதந்தரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் Freedom 2 Walk and Cycle Campaign நிகழ்ச்சி மத்திய அரசு மற்றும் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதில், அதன் ஒருபகுதியாக அண்ணாநகர் இணைப்பு சாலை உய்யகொண்டான் கால்வாய் ஒட்டி அமைந்துள்ள (மேற்கு பகுதி) சாலையில் யோகாசனம் பயிற்சி நிகழ்ச்சியினை 02.10.2021ம் தேதி சனிக்கிழமையன்று காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை மகளிர்களுக்கான மிதிவண்டி பேரணி நிகழ்ச்சி அண்ணா நகர் இணைப்பு சாலை புறநகர் பேருந்து நிறுத்தம் முதல் தென்னூர் அறிவியல் பூங்கா வரை நடைபெறவுள்ளது. மேலும் மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை மகளிர்களுக்கான மிதிவண்டி பேரணி நிகழ்ச்சி அண்ணா நகர் இணைப்பு சாலை புறநகர் பேருந்து நிறுத்தம் முதல் தென்னூர் அறிவியல் பூங்கா வரை நடைபெறவுள்ளது.
எனவே மேற்படி தேதியன்று நடைபெறவுள்ள யோகா பயிற்சி நிகழ்ச்சி மற்றும் மகளிர்களுக்கான மிதிவண்டி பேரணி நிகழ்ச்சிகள் சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற உள்ளதால், இதில் பொதுமக்கள் மக்கள், மகளிர்கள் மிதிவண்டியுடன் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சிகளை சிறப்பிக்குமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments