மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அறிவுசார் குறைபாடுடைய 75 சதவீதத்துக்கு மேல் கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்ட, தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த புற உலகு சிந்தனையற்ற மதி இறுக்கமுடைய மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும் பும் மாற்றுத்திறனாளிகள், தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம். மாற்றுத்திறனாளி ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும்
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட வங்கிக்க ணக்கு புத்தகம் ஆகியவற்றுடன், அருகில் உள்ள தமிழ்நாடு இ-சேவை மையம், https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற முகவரியில், பராமரிப்பு உதவித்தொகை என்ற பிரிவில் விண்ணப்பித்திடுமாறும்,
வருவாய்த்துறையின் வாயிலாக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,500 உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் விருப்பத்தின் பேரில் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெற்றிய இணைய வழியாக விண்ணப்பித்திடவும், விவரங்களுக்கு திருச்சி கண்டோன் மெண்ட் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது 0431-2412590 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments