Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

ஒரே டிக்கெட்டில் பல முறை பயணம் செய்யலாம்! ரயில்வேயின் இந்த புதிய விதிகள் தெரியுமா?

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ரயில்வே பல விதிகளை அவ்வப்பொழுது வகுக்கும் அப்படி ஒரு அப்டேட் தற்பொழுது வந்துள்ளது. இந்த முக்கியமான விதிகளில் சிலவற்றைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தொலைதூர பயணத்திற்கு மிகவும் வசதியானதாகவும், சிக்கனமாகவும் கருதப்படுவதால், தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இதில் பயணம் செய்வது சாதாரண வாகனத்தை விட மிகவும் வசதியானது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ரயில்வே பல விதிகளை வகுக்கிறது. 

சில நேரங்களில், சில காரணங்களால், ரயிலை தவறிவிடுகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், நண்பர்களிடம் சென்று நாம் ரயிலைப் பிடிக்கும் வசதியை நண்பர்களிடம் கேட்டு அறிகிறோம் தற்பொழுது அதற்கான உதவியை ரயில்வே வழங்குகிறது. நாம் நம் பயணத்தை முடிக்கலாம். நாம் விருப்பப்பட்டால் பயணத்தை துண்டித்துக்கொண்டும் தொடரலாம்.

ஒரு நீண்ட பயணத்திற்கு வெளியே செல்லும்போது, ​​​​டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் திட்டம் மாறுகிறது அத்தகைய சூழ்நிலையில், புதிய டிக்கெட் வாங்க வேண்டியதில்லை. அந்த டிக்கெட்டிலேயே நம் பயணத்தைத் தொடரலாம். நம் பயணத்தைத் தொடர, நாம் TTRவுடன் பேச வேண்டும். அவர் ஒரு டிக்கெட்டை நமக்கு தயார் செய்து கொடுப்பார். சில காரணங்களால் நாம் ரயிலைத் தவறவிட்டால், அடுத்த இரண்டு நிலையங்களுக்குள் நாம் அதைப் பிடிக்க வேண்டும். அதுவரை TTR நம் இருக்கையை யாருக்கும் கொடுக்க மாட்டார்.

ரயில்வேயின் இந்த தனித்துவமான விதி பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் 500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால் இடையில் ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ளலாம். பயணம் 1000 கிலோமீட்டர் என்றால், நீங்கள் இரண்டு இடைவெளி எடுக்கலாம். நாம் ரயிலில் பயணம் செய்யும்போது, ​அதாவது பயணம் மேற்கொள்ளும்  மற்றும் இறங்கும் தேதியைத் தவிர 2 நாட்கள் ஓய்வு எடுக்கலாம், இருப்பினும், சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் ராஜ்தானி போன்ற நாட்டின் சொகுசு ரயில்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *