Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

சாதனையாளரை போற்றும் Women of wonder விருதுக்கு நீங்களும் விண்ணப்பித்து சாதனை மங்கைகள் ஆகலாம்

ஒரு பெண்ணின் வெற்றி என்பது அவள் குடும்பத்தை தாண்டி இந்த நாட்டிற்கு மிக முக்கியமானது. இந்த சமூகத்தின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது அவர்கள் செய்யும் சிறு சிறு முயற்சிகளில் நம்முடைய பங்களிப்பு என்பது அவர்களை தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பது. இன்றைக்கு பல்வேறு துறைகளில் பெண்கள் தங்களுடைய சாதனையை பதிவு செய்து வருகின்றனர்.

மருத்துவம், விவசாயம் , விண்வெளி ஆராய்ச்சி ,ஆசிரியர், தொழில் முனைவோர், கட்டிட பொறியாளர், விமானி என்று எண்ணிலடங்கா துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். அவர்களின் திறமைக்கும் அவர்களுடைய சாதனைக்கும் நாம் கொடுக்கும் ஒரு சிறு அங்கீகாரமும் அவர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்கி தருகிறது. நம்மை சுற்றி இருக்கும் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கும் ஏன் நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கும் பெண்களின் திறமையை உலகிற்கு பறைசாற்றும் விதத்தில் அங்கீகரிக்கும் ஒரு விழாதான் Women of wonder விருது வழங்கும் விழா.

சென்ற ஆண்டு தமிழகத்திலிருந்து 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 65 பிரிவுகளில் சாதனைப்புரிந்த பெண்களுக்கு வருகின்ற மகளிர் தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதினைப் பெற திறமையும் தகுதியும் உடையவர்களுக்கு இந்த விருது கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் நாமே அவர்களுக்காக விண்ணப்பிக்கலாம். கீழுள்ள லிங்க் https://forms.gle/rXJUUNHVWKiH4dsw7 பயன்படுத்தி கொள்ளலாம். பெண்களின் சாதனைகள் ஆண்கள் போற்றிட இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *