டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 400*4 மீட்டர் ஆண்கள் மற்றும் கலப்பு இரட்டையர் தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் திருச்சி லால்குடி வழுதியூரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் கலந்து கொண்டார். திருச்சி வந்த அவருக்கு ஜங்சன் ரயில் நிலையத்தில் விளையாட்டு ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளரிடம் கூறுகையில்… ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. போட்டியில் நடந்த சிறிய தவறால் பதக்கம் வெல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒலிம்பிக்கில் செய்த தவறுகளை சரிசெய்து மீண்டும் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகளில் பதக்கம் வெல்வேன். இந்தியாவிலுள்ள திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறனை மேம்படுத்தினால், ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வெல்லலாம்.
விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அதிக அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். இந்த வரவேற்பில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு, மாவட்ட தடகள சங்க செயலாளர் பயிற்சியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments