திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்த சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சென்று லால்குடி துணை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் உத்தரவின் பேரில் சமயபுரம் ஆய்வாளர் தசரதன் மற்றும் உதவி ஆய்வாளர் கவிதா ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு நபர் இருந்ததை கண்டு அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் லால்குடி அருகே தாளக்குடி முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முருகானந்தம் (24) என்பதும், அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முருகானந்ததை கைது செய்து விசாரணை செய்த பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments