அதிவேகமாக அந்த பைக் இரண்டாக உடைந்தது – இளைஞர் பலி
திருச்சி நீதிமன்றம் அருகே மாணவர்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதி வேகமாக செல்வதை காண முடிகிறது.சாலை நேராக அகலமாக இருப்பதால் இளைஞர்கள் அதிக குதிரை திறன் கொண்ட விலையுயர்ந்த பைக்குகளை அதி வேகத்துடன் ஒட்டுகின்றனர்.
திருச்சி தென்னூர் காவல்காரர் தெருவை சேர்ந்த நிர்மல் ஜோஸ் (வயது 25) என்ற இளைஞர் இன்று(23.03.2025) மாலை நீதிமன்ற அருகே மாணவர்கள் சாலையில் அதி வேகத்துடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த போது சாலையோர கம்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் மோதி பைக் இரண்டாக உடைந்தது.இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்த போக்குவரத்து காவல்துறையினர் அவரது உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதி வேகத்தால் இளைஞரின் உயிர் பறிபோனது பரிதாபத்துக்குரியது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments