புதுக்கோட்டை கண்ணகோன்பட்டி பகுதியை சேர்ந்த அரவிந்த் பார்வையாளர் காளை முட்டியதில் பலியானார். 25 வயது இளைஞரான இவர் மாடு பிடிக்கும் பகுதியில் மாடு முட்டியது.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
மேலும் 32 பேர் காயம்.7 பேர் மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 400 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. 140 காளையர்கள் களம் கண்டுள்ளனர்.
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 10 மாடுகளை பிடித்து சூரியூரை சேர்ந்த பூபாலன் என்பவர் முதலிடத்திலும், 9 காளைகளை பிடித்து திருவெறும்பூரை சேர்ந்த மாரி இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
Comments