Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் கூட்டமாக வீலிங் செய்யும் இளைஞர்களால் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்சி மாநகர், மாவட்ட சாலைகளில் தினமும் சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து வருவது வழக்கமாகிவிட்டது. இதில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டும் அந்த இளைஞர் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு, வாகனத்தை ஓட்டுகிறார்.

பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ள காவிரி பாலத்தில் அந்த இளைஞர் இரவில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு சாகசம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சாகச வீடியோவுடன், சினிமா வசனங்கள் இணைத்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமின்றி இந்த சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் திருச்சி மாவட்டம் புறநகர் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த சாகசம் செய்து அந்த வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாகச நிகழ்ச்சி ஒருநாள் இரண்டு நாள் மட்டுமல்ல தினமும் நடக்கிறது. இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாடவே அஞ்சுகிறார்கள்.  இவர்கள் சாகசம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டால், ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும்.

இந்த இளைஞர்கள் செய்யும் அட்டகாசத்திற்காக, யாரோ, எவரோ பாதிக்கப்படுவதா என பைபாஸ் பகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். போக்குவரத்து நிறைந்த  சாலைகளில் இதுபோல அஜாக்ரதையாகவும், விபத்து ஏற்படுமாறு வாகனம் ஓட்டினாலும் சென்னையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நூதன தண்டனையும் வழங்கப்படுகிறது. ஆனால் திருச்சி மாநகரத்தில் மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், குட்செட் ரோடு பகுதிகளில்கல்லணை சாலை திருச்சி அரியலூர் புதிய தேசிய நெடுஞ்சாலை அதிலுள்ள இணைப்பு சாலை உள்ளிட்ட சாலைகளில்இவர்கள் இரு சக்கர வாகனங்களை கூட்டமாக 10த்திற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீலிங் செய்வது மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பொது நலன் கருதி இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருச்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *