திருச்சி மாநகரில் வாகனத் திருட்டு அதிகரிக்கப்பட்டதையடுத்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது காவல்துறையினர் பார்த்து தப்பியோட முயற்சி செய்த சரவணகுமாரை விசாரித்துள்ளனர்.
விசாரணையில் திருச்சியில் ஸ்ரீரங்கம், தில்லைநகர், அரசு மருத்துவமனை, கோட்டை காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதாக ஒப்புக்கொண்டார். உடனடியாக உதவி ஆய்வாளர் உமாசங்கரி தலைமையிலான எஸ்எஸ்ஐ செபாஸ்டின், எஸ்எஸ்ஐ மகேஷ்குமார், ஹெட் கான்ஸ்டபிள் விஜயராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தனிப்படை விசாரணை நடத்தியதில் களவுபோன 17 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.
சரவணக்குமார் அனைத்து இருசக்கர வாகனங்களையும் வேறு ஒரு சாவி போட்டு அதனை திறந்து எடுத்து சென்றுள்ளார். மேலும் தன்னுடைய இரு சக்கர வாகன எண்ணை திருடிய வானங்களில் எழுதி இன்ஜினில் உள்ள சேஸ் நம்பரை மட்டும் மாற்றிவிட்டு குறைந்த விலைக்கு வாகனங்களை விற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவிட் காலத்தில் மூன்று மாத காலத்தில் 17 வாகனங்களை திருடிய சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்களை ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் உரியவர்களிடம் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஒப்படைத்தார். மேலும் தனிப்படை பிரிவில் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
Comments